104

1 குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
2 (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
3 நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
4 அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
5 ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
6 அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
7 அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
8 நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
9 நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).