94

1 நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
2 மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
3 அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
4 மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
5 ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
6 நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7 எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
8 மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.